தி.மு.க.வின் 2021 தேர்தல் அறிக்கையை முன்னிறுத்தி சமவேலைக்கு சமஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்யச் சொல்லி பகுதிநேர ஆசிரியர்களும், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை என மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவு ஊழியர்களும் சென்னையில் ஒருசேர போராட்டம் நடத்தி அரசை நெருக்கிவருகின்றனர். 

Advertisment

சமவேலைக்கு சமஊதியம் என்கிற கோரிக்கையை முன்வைத்து 2022-ல் தொடங்கிய போராட்டம் பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் முடிவடையாத நிலையில், 2026ஆம் ஆண்டிலும் அடியெடுத்து வைத்து 26-வது நாளாக இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. 

Advertisment

இந்த போராட்டத்தின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுவது, மே மாதம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 8,370 மாத வருமானமாகவும், ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 5,200 மாத வருமானம் என அடிப்படை மாத வருமானம் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டுக் கும் 3,170 ரூபாய் இடைவெளி உள்ளது. இப்படி ஒரு மாத இடைவேளையில் இருவேறு மாத ஊதியம் வழங்கியதாலே இந்த சிக்கல் எழுந்துள்ளது. அப்படி மே மாதம் பணி நியமனம் மூலமாக சேர்ந்தவர்களுக்கும், ஜூன் மாதம் பணியில் சேர்ந்தவர்களுக்கும், கல்வித்தகுதி வெவ்வேறாக உள்ளதா என்றால் இல்லை, இரண்டும் ஒன்றுதான். மேலும் இருவருக்கும் உழைப்பும் வெவ்வேறாக உள்ளதா என்று பார்த்தால் அதுவும் ஒன்றுதான். ஆனால் ஊதியம் மட்டும் வேறுபாடாக எப்படி இருக்கமுடியும்? என்பதே இவர்களின் கேள்வி.

இதை எதிர்த்துத்தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத் தில் 2009-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டுக்கு எதி ராகப் போராடிய ஆசிரியர் களுக்கு, அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக துணைநின்றது. மேலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 311-வது அம்சமாக தி.மு.க. அரசு வந்த வுடன் நிச்சயம் இடைநிலை ஆசிரியர்களுக்கு “சமவேலைக்கு சமஊதியம் வழங்கப்படும்” என அறிவித்திருந்தார் ஸ்டாலின். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் இதுநாள்வரையிலும் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவே இல்லை என குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவரு கின்றனர். 

Advertisment

sathu1

ஆட்சிக்கு வந்து ஒன்ற ரை வருடம் கடந்தும் இவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை என 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ல் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர். ஜனவரியில் நிறைவேற்றப் படும் என தமிழக முதல்வர் உத்தரவாதம் கொடுத்த தால் போராட்டத்தைக் கைவிட்டனர். உடனடியாக மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது அரசு. அந்தக் குழுவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 2023ல் மீண்டும் இதேபோல போராட்டம், மீண்டும் அதே குழு பேச்சுவார்த்தையில் மூன்றுமாத கால அவகாசம் கேட்டது. தீர்வுகிட்டும் எனச் சென்ற இவர்களுக்கு மீண்டும் கிடைத்தது ஏமாற்றமே. 2024, 2025, 2026 என ஆண்டுக்கணக்கில் இவர்களது போராட்டம் நீடித்துவருகிறது. 

இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். 2012-ஆம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, கணினி, இசை, ஓவியம், தையல், தோட்டக்கலை, வாழ்வியல் கல்வி என 15,000 சிறப்பு ஆசிரியர்கள் பகுதி நேரமாக நியமனம் செய்யப்பட்டனர். அப்போது அவர்களுக்கு ஆரம்பமாக மாத ஊதியம் ரூ.5000 வழங்கப்பட்டுவந்தது. பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கூடுதலாக ரூ.2000 சேர்த்து மாதம் ரூ.7000 சம்பளமாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக உயர்த்தி மாத ஊதியம் ரூ.10,000 வரை வழங்கப்பட்டது. இந்நிலை யில் பணி நிரந்தரம் செய்யச்சொல்லி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. இவர்களுக்கு ஆதரவாகப் பேசிவந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 181ஆவது வாக்குறுதியாக தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்துதரப்படும் எனத் தெரிவித்திருந்தனர். மேலும் 153-வது வாக்குறுதியாக, 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவர் என அறிவித்திருந்தனர். 2012-லிருந்து 2026 வரை 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள் இந்த பகுதிநேர ஆசிரியர்கள். தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தபடி எதையுமே செய்யாமல் இருந்த காரணத்தால் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்த நிலையில் தற்போதைய கல்வியமைச் சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 2,500 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என அறிவித்து, மாத ஊதியத்தை ரூ.12.500 ஆக அதிகரித்தார். ஆனாலும் அது போதாது, தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரம் என்பதை நிறைவேற்றவேண்டும் என டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர் போலீசார்.  

இந்த அலை ஓய்வதற்குள் மீண்டும் சத்துணவுப் பணியாளர்கள் போராட்ட அலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் என 71,121 பேர் பணி புரிந்துவருகிறார்கள். இவர்களுக்கான காலமுறை ஊதியம், கூடுதல் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை என மூன்று கோரிக்கைகளை வைத்து போராட்டத்தைக் கையிலடுத்துள்ளனர். இவர்கள் 1984-ல் பணியில் சேர்ந்தபோது சத்துணவு அமைப்பாளருக்கு சம்பளமாக 150 ரூபாயும், சமையலருக்கு 90 ரூபாயும், உதவியாளருக்கு 60 ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 28,000 வரை மாத ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. 2017-ல் ஓய்வூதியம் வழங்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை அதே 2000 மட்டுமே வழங்கிவருகிறார்கள். இன்றைய விலைவாசிப்படி பார்த்தால் எங்களின் நிலை படுமோசமாக உள்ளது. மத்திய அரசு ஊதிய நிலவரப்படி பார்த்தால் இத்தொகையை 9,000 ரூபாயாக வழங்கவேண்டும். 

sathu2

ஆனால் இவர்கள் கேட்பது 7,850 ரூபாய் மட்டுமே. பணிக்கொடையாக தற்போது அமைப்பாளருக்கு 1 லட்சமும், மற்றவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. 

இதனை மாற்றி, அமைப்பாளர்களுக்கு 5 லட்சமும், மற்றவர்களுக்கு 3 லட்சமும் வழங்கவேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தைக் கையிலெடுத் துள்ளனர். 

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு கைது செய்துள்ள சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள், போராட்டக்காரர்களை ஒருங் கிணைத்து 20.01.26 தேதி இரவு முக்கிய பொறுப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இவர்களும் போராட்டத்தை மீண்டும் வலுப்படுத்தப் போகிறார்களாம். இப்படி சென்னையில் ஒரே நாளில் அரசு ஊழியர்களின்  மூன்று பிரிவினர், வெவ்வேறு கோரிக்கைகளுடன் போராடிவருகின்றனர்.

இடைநிலை ஆசிரியரான கருப்புசாமி பேசுகையில், "சமூக நீதி பேசும் அரசு எங்களின் ஊதியத்தில் மட்டும் ஏன் பாகுபாடு காட்டுகிறது? சமவேலைக்கு சமஊதியம் இல்லையா? மூன்று பேர்கொண்ட குழு அமைத்து மூன்று வருடங்களாக இன்னுமா அறிக்கையை தயார் செய்துகொண்டிருக்கிறது? அ.தி.மு.க. அரசுதான் எங்களை வஞ்சித்தது என நினைத்து, தி.மு.க.வுக்கு வாக்களித்தால் இவர்களும் இப்படி வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும். போராட்டக்காரர்களை அடக்குவதால் தீர்வு வராது, அரசு இதில் நல்ல முடிவெடுக்கவேண்டும்''’என்றார். 

அதேபோல பகுதிநேர ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் முரளி பேசுகையில், "இந்த அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியைத்தான் நாங்கள் நிறைவேற்றும்படி கேட்கிறோம். தற்போது ஐந்தாண்டு நிறைவடையும் நேரத்திலும் எங்க ளுக்கான நீதியை இந்த அரசு வழங்கா விட்டால், பணிநிரந்தரம் வழங்கும்வரை எங்களின் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை ஏன் தேர்தலில் வழங்கவேண்டும்?'' என்றார்.

சத்துணவு ஊழியர் சங்க தலைவர் ஜெசியோ, “"45,000 காலிப் பணியிடங்கள் இருந்தும்கூட சத்துணவுப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் கூடுதலாக பணியை சிறப்பாக செய்துவருகிறோம். மத்திய அரசு கொடுக்கும் ஓய்வூதியத்தைக்கூட கேட்கவில்லை. 7,850 ரூபாய்தான் கேட்கிறோம். பணிக்கொடையாக ரூ 5 லட்சம்வரை வழங்கவேண்டும். எங்களுடைய ஓய்வூதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும், இது தொடர்பாக முதல்வரின் அறிவிப்பு வெளியாகுமென்று சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே அரசின் மீதான நல்லெண்ண அடிப்படையிலும், மாணவர்களின் நலன் கருதியும் போராட்டத்தை தற்கா-கமாக ஒத்திவைக்கிறோம். முதல்வரின் அறிவிப்பு தாமதமானால், ஜனவரி 27ஆம் தேதியி-ருந்து மீண்டும் போராட்டம் தொடரும்'' என்றார். 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தப் போராட்டங்களை தமிழக அரசு எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் . 

-சே 

படங்கள்: ஸ்டாலின்